Monday, September 26, 2011

பேருந்தில் ....


ஜன்னலோர இருக்கையில்அமரும் போட்டியில்
ஆளுக்கு ஒருவராய்அமர்ந்தவேளையில்

இருக்கை மாறாமல் இருக்க

படியேறும் பயணிகளை ஆவலுடன்
நோக்கும் கண்களோ
படபடப்புடன் தேடும்
ஒரே பாலினத்தவரை ...


பெரியவரோ ,கைக்குழந்தை பெண்ணோ
சிறுவர்களோ எதிர்படும் தருணத்தில்
பாய்ந்து அழைத்து அருகில்
அமர வைத்த நொடியில் தொலைந்து
சென்றது சமஉரிமை கொள்கை

எனினும் காப்பாற்றப்பட்டது
என் ஜன்னலோர இருக்கை ,,,

*********************************************************************************************
பேருந்தில் கணவரின் தோளில்
நிம்மதியாய் சாய்ந்து உறங்கி வரும் பெண்கள் ,
கைபேசியில் நெடு நேரம் பேசிக்கொண்டு வருபவர்கள் ,
ஜென்னலோர இருக்கையில் ஆசுவாசமாக
வேடிக்கை பார்த்து வருபவர்கள் ,
இருக்கையில் அமர்ந்துகொண்டே
சேட்டை செய்து வரும் சிறார்கள்,
தின்பண்டங்களை ரசித்து உண்டு வருபவர்கள் ,
கைபேசியில் பாடல் ரசித்து கேட்டு
கண்மூடி பயணம் செய்து வருபவர்கள்,
ஒருவரேனும் அறிந்து இருக்கவில்லை
நெடு நேரம் கால் கடுக்க நின்று பயணம்
செய்து வரும் சக பயணிகளின் கஷ்டத்தை ........
..........................................................................................................................

Friday, September 2, 2011

என்ன தவம் செய்தனை .....

மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் ...ஆயர் பெண்கள் யசோதாவை பார்த்து பாடுவதை போல் அமைந்த நெகிழ்வான பாடல்..இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள் ..ஆதி தாளம் ..காபி ராகத்தில் அமைந்த பாடல் ...






என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்யதனை யசோதா ...

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
உன் கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறமை
கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்ச வைத்தாய் கண்ணனை
தாயே என்ன தவம் செய்தனை ....

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை , புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
யசோத எங்கும் நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க என்ன தவம்
செய்தனை ...