Monday, November 21, 2011

புலம்பல்ஸ்

ஜாக்கி என்று தான் அதை அழைக்கவேணும் என தெரு குழந்தைகள் சொல்வாங்க. எங்கள் தெரு கோடி வீட்டில் தானாகவே வளர்ந்து வந்தது அந்த நாய் ..சரியாக உணவு கிடைக்காது போல் அதுக்கு ரோட்டில் யாரேனும் பை எடுத்து போனால் சுத்தி சுத்தி அவங்களை வரும் ..ஜாக்கி கடித்து விடக்கூடாது எனும் பயத்திலேயே மாடியில் இருந்து அவ்வப்போது நான் பிஸ்கட் போடுவதுண்டு ..அப்பவும் நாலைந்து என முடித்து கொள்ளாது ஒரு பாக்கெட் முடியும்வரை ஓடி ஓடி தின்று தீர்க்கும் ..மாலையில் தெருவில் குழந்தைகள் விளையாடும் பொழுது உற்சாகமாய் அதுவும் அங்கோடி இங்கோடி விளையாடிக் கொண்டிருக்கும் ..கொஞ்ச நாளா உற்சாகம் இல்லாம சோர்ந்து படுத்து பார்த்துகிட்டு இருக்கும் குழந்தைகளோட விளையாடாம ..






அன்றைக்கும் பக்கத்துக்கு வெற்று பிளாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறதென நினைத்தேன் ..குழந்தைகள் ஆரவாரம் பண்ணிட்டு இருந்தாங்க தெருவில் ஆனால் ஜாக்கி அந்த வெற்று பிளாட்டில் சற்றும் அசைவில்லாம படுத்து இருந்தது மனசுக்கு உறுத்தலா இருந்துச்சு ...பின்பு அதை நானும் மறந்துட்டேன் ..மறுநாள் பொழுது விடியும் பொழுதே மழை பொழுதாகிற்று .. பிரஷ் செய்துகொண்டே ஜன்னலை திறந்து பார்த்தா அடிக்கிற மழையில் ஜாக்கி ஆடாமல் அசையாமல் கிடந்தது அந்த பிளாட்டில் ..மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு சங்கடம், அது வாழ்ந்து வந்த வீட்டில் யாரேனும் இருக்காங்களா என்று பால்கனி வழியா பார்த்தேன். ஒருவரும் கண்ணில் தென்படவில்லை ..பார்த்தால் சொல்லலாமென என் வேலையில் மூழ்கலானேன் ..

மாலை வேலை முடிச்சு எப்பவும் போல் குழந்தைகளை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தபோது தான் ஜாக்கி ஞாபகம் வந்துஜன்னல் வழியே பார்த்தால் அதே இடத்தில அசைவற்று கிடந்தது ..தெருவில் விளையாடிகொண்டிருந்த குழந்தைகளிடம் ஜாக்கியை பாருங்க ஏன் இப்படி படுத்திருக்கு என்று சொல்லவும் எல்லா குழந்தைகளும் ஜாக்கி ஜாக்கி என கத்திகொண்டே அதுகிட்ட போய் கை தட்ட ,செடியை பிச்சு போட என ,எதெல்லாமோ சொல்றாங்க இருந்தும் ஜாக்கியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அப்புறம் அவர்களும் முடிவு பண்ணிடாங்க ஜாக்கி செத்திருச்சு என .... ஏய் வள்ளி ஜாக்கி செத்ருச்சு என சொல்லிக்கொண்டே அந்த வீட்டை நோக்கி ஓடினாங்க ..அந்த சின்ன பொண்ணும் அழுதுகிட்டே வந்து பார்த்துட்டு,அப்பா வந்ததும் தூக்கிட்டு போகலாம்னு அம்மா சொல்லிட்டாங்கனு சொல்லி அழுக , மீண்டும் எல்லாரும் ஜாக்கி ஜாக்கி என தொட்டுப் பார்க்க ஆரம்பிச்சாங்க அழுகையோடு....

கொஞ்ச நேரத்தில் மண் வெட்டும் சத்தம் கேட்டு பார்த்தால்,ஜாக்கி இறந்து போன அதே வெற்று பிளாட்டில் குழி வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன கார்ப்பரேஷனில் சொல்லாம வேறு ஒருவரின் பிளாட்டில் இப்படி பண்றாங்கன்னு பதறி, கீழ் வீட்டு பெரியவரிடம் சொல்ல, அவரு வேணாம்பா நாம வாழ வந்தவங்க இந்த ஊருக்கு. அவங்கெல்லாம் இதே ஊர்ல முப்பது வருஷமா இருக்கிறவங்க.நாம ஏதாவது சொல்ல போனால் . பேச்சு வாங்கி கட்டமுடியாது, நீ போமா நாளைக்கு கார்ப்பரேசனுக்கு நான் போன் பண்ணிக்கிறேன் என்று சமாதனம் செஞ்சு அனுப்பிட்டார் என்னை.


25 லட்சம் வரை பேரம் பேசிக்கொண்டிருக்கும் யாரோ ஒருத்தரின் பிளாட்ல கொஞ்சமும் கவலை இல்லாம ,ஏதோ அப்படியே அழுகி போகவிடாம கருணை பட்டு புதைச்சுட்டாங்க ஜாக்கியை அந்த வீட்டுகாரங்க ..
குழந்தைங்க வழக்கம் போல விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. நான் மாடியில் இருந்து பார்க்கும் போதெல்லாம் மண்மேடு தெரியும், இந்த இடத்தை யாரேனும் வாங்கி வீடு கட்டினால் ஜாக்கியோட ஆவி சுத்துமோ அங்கேயே என்று நினைப்பதுண்டு ..
. மாடியில் இருந்து ஏதேனும் சாப்பிடும் போது ஜாக்கி ஞாபகம் வரும். அந்த மண்மேட்டில் கையில் இருப்பதை வீசி எரிவதுண்டு .ஒரு வேலை கார்ப்பரேஷன் ஆட்கள் தூக்கிட்டு போயிருந்தா கூட மறந்திருப்பேன் இப்படி புலம்பிட்டு இருக்காம ..தினமும் ஜன்னல் வழியே காலை நேர இயற்கையை ரசித்த படி பிரஷ் பண்ணிகொண்டிருந்த நான், இப்பொழுதெல்லாம் பிரஷ் பண்ணும்பொழுது அந்த ஜன்னலை திறப்பதே இல்லை .......

1 comment:

  1. இது போன்ற தருணங்கள் எனக்கும் வாய்த்ததுண்டு ஆசையாய் வளர்த்த கிளியை பூனை கழுத்தில் கடித்து ஒருநாள் கிளியின் உயிரை பிடிச்சு வச்சோம்.யாரோ வளர்த்தாலும் நன்றியோடு எங்கள் வீட்டைச் சுற்றிய டைகர் மறைவும் அப்படித்தான்.எந்த விலங்கோ பறவையோ வளர்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டோம் .வளர்த்து அதன் மரணம் பெரிய அளவு மனதை பாதிப்பதால்.வார்த்தைகளில் அலங்காரம் சேர்க்காமல் மனதில் உள்ளதை உள்ளபடி பிரதிபலித்து இருக்கின்றன எழுத்துகள் ....படிக்கவும் இலகுவாக அந்த தாக்கமும் இம்மி பிசகாமல் மனதில் ...

    ReplyDelete