Saturday, February 27, 2010

ஒவ்வொரு ஜனனமும் மரணமே

முதுமை இளமையின் தொடர்ச்சி...இளமை முதுமையின் தொடக்கம் ...
பிறப்பு என்பது மட்டுமல்ல..அதுவும் ஒரு மரணம்தான்...
பிறப்பின்போது ஏற்படும் நடுக்கத்தை நாம் ஞாபகத்தில் முடிந்து வைத்திருப்பதில்லை..


ஒரு கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்...





ஒரு கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்...

*நாம் இருக்கும் அறையின் சுவர்கள் சிரிதாகின்றனவா ?பெரிதாகின்றனவா? *

*தெரியவில்லை அனால் நெருக்கடியாக இருப்பது போல தோன்றுகிறது *

*ஒரே மாதிரியான மந்தமான வாழ்க்கை*

*நிச்சயமாக இல்லை ...நாம் சுவசிக்கவோ உணவருந்தவோ தேவை இல்லை..மிதந்தால் போதுமானது *

*ஆனால் இது மட்டும் இருத்தலுக்கு போதுமானதா?*

*நீ கவலைபடாதே!*

*நான் பிறப்பு என்று ஏதோ கேள்விபட்டேன் *

*எல்லாம் வதந்தி* என்றது மற்றொன்று .

அடுத்தநாள் காலை ஒருவித சுருக்கம் இருவரையும் எழுப்பியது....
*ஒ! பெரிய பூகம்பம் * என்றது ஒன்று..
*வீடு தகர்கிறது* என்றது மற்றொன்று .
*நான் நழுவுகிறேன்*.
*எங்கே போகிறாய்*
*தெரியவில்லை ...உதவி புரிவாய்*
*என்னால் முடியவில்லை*
*நான் போய்வருகிறேன் சகோதரா?*
*இது உண்மையாகவே பயங்கரம் * என்ற இரண்டாவது குழந்தையும் நழுவ தொடங்கியது..நிச்சயம் நமது எல்லாவற்றிற்குமான முடிவு என்று நினைதுகொண்டது..

இந்த சின்ன உருவக கதையை மரணத்திற்கும் ,ஜனனத்திற்கும் ஆனா,தொடர்பாக நினைத்து பார்க்க முடியும்..

ஒரு குழந்தை பிறக்கிறது..பிறக்கும்போது அது ஓவென்று அழுகிறது..நம்மை பொறுத்தவரை எது ஜனனமாக இருக்கிறதோ அது அந்தக் குழந்தையை பொறுத்தவரை ஒரு மரணம்...

பாதுகாப்பான சூழலில் ,உண்ணவேண்டிய அவசியமின்றி சுவாசிக்க வேண்டிய நிர்பந்தமின்றி எல்லாவற்றையும் தனக்காக வேருவோருவர் செய்யும் சூழலிருந்து புதிய சூழலுக்குள் புகுவது ஆபத்தானது தான்... ஒவ்வொரு புதிய சூழலில் நுழையும்போதும் நமக்குள் ஒரு மரணம் நிகழ்கிறது..

ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் அதன் பயத்தை புலப்படுத்துகிறது..பிறப்பும் ஒரு வித இறப்புதான் குழந்தையை பொறுத்தவரை.. ..
வளர்ச்சி காலத்தின் கொடை என்றால் மரணம் அதன் இன்னொரு பரிமாணம்..மரணம் தேவை இல்லை என்றால் வளர்ச்சியும் நின்று போகும்....
பிறப்பு இறப்பின் போது தீர்மானிக்க படுகின்றது..
இறப்பின் கையில்தான் பிறப்பிற்கான தராசு இருக்கிறது....

இறையன்பு...

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பிறப்பை எதிர்மறையாய் கொண்ட ஓர் அழகான சிந்தனை ..., கற்பனைக்கு உயிர் கொடுத்து ஜனனமும் மரணமாய் சொல்லிய விதம் அழகு.., இறையன்பின் தொகுப்பில் ஒன்றை எடுத்து ...எங்கள் கண்களுக்கு விருந்தும், சிந்தனைக்கு புது தெளிவும் தந்த குருவுக்கு நன்றி :)))

    ReplyDelete