Sunday, February 28, 2010

சுயம்




கௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது ஒருவன் அவரிடம் *நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ,ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் ? என்று ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை ?* என கேட்டான் ....

புத்தர் நண்பரே ஒரு வேலை செய் மலையில் கிராமத்துக்குள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வா.ஒரு பட்டியல் தயார் செய்;

ஒவ்வொரு வருடைய பெயரையும் எழுது;அதற்கெதிரே அவன் அடைய விரும்புவதையும் எழுது ..

அவன் சென்று அனைவரையும் விசாரித்தான்...அனைவரும் பதில் அளித்தனர்..இரவு புத்தரிடம் சென்று தனது குறியீட்டை அளித்தான்..

புத்தர் இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என்று கேட்டார்..

அவன் ஆச்சரியம் அடைந்தான் ..அந்த பட்டியலில் ஒருவர் கூட தமது விருப்பம் மோட்சம் அடைவது என்று எழுதவில்லை ..

புத்தர் ஒவ்வொரு மனிதனும் அடையமுடியும் என்றே நான் கூறினேன்..ஆனால் ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்பு கிறார்கள் என்று கூறவில்லை.. என்றார்...

யார் எதை விரும்புகிறார்கள் என்பது முக்கியம்..சுயத்தையே தெரியாதவன் எப்படி சுயத்தை முன்னேற்ற முடியும் ??????

1 comment:

  1. ///சுயத்தையே தெரியாதவன் எப்படி சுயத்தை முன்னேற்ற முடியும் ?????? ///

    அழகான புத்தனின் கருத்து ..சிறுகதையாயினும் ஆழமான உண்மை.
    இதை என் பார்வைக்கு தந்த குருவுக்கு ஆழமான நன்றிகள் பல பல :))))

    ReplyDelete