Tuesday, March 23, 2010

குற்றம் நடந்தது என்ன ஒரு காமெடி ரிப்போர்ட்

கோபிநாத் ஸ்டைலில் படிக்கவும்



இது ஒரு கோடை காலம் மொட்டை மாடிகளில் அப்பளம் செய்ய தகுந்த காலமும் கூட .....அப்படி இருக்கையில் ஒரு சம்பவம் நடந்தது என்ன ..வாருங்கள் பார்க்கலாம்


சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் செல்லும் வழியில் 12.45km தூரம் சென்றால் மஞ்சக்கான் பட்டி என்ற ஒரு அழகிய கிராமம்..அங்கு வறண்ட வயல்களும்,வாடிய முகங்களும் காட்சி அளிப்பதைப் பார்த்து நாம் அந்த பக்கம் வீடியோ கேமராவைத் திருப்பாமல் வேறு பக்கம் தப்பித்து அல்லாடி சென்று கொண்டிருக்கும் போது,அப்பள திருட்டுத் தெரு எங்கிருக்கு என்று அங்கிருந்தவர்களை கேட்டதும் எல்லோரும் கேமரா முன் பல் இளித்துக்கொண்டு வழி சொன்னார்கள் ....


அந்த அப்பள திருட்டு தெருவில் நாம் நுழைந்தோம் !!!

அங்கே எட்டாம் எண் வீட்டினுள் நுழைந்த போது ..வீட்டின் உரிமையாளர் பேச்சியம்மா வரவேற்றார்..சம்பவம் இது தான் ...அந்த தெரு முழுவதும் அப்பளம் விற்று பிழைப்பு நடத்துபவர்கள் .சில காலமாக காய வைக்கும் அப்பளங்கள் காணாமல் போகின்றன.அதற்காகவே அந்த தெருவில் உள்ள அனைவரும் செலவு செய்து 3g கேமரா வரவழைத்து கண்காணிக்கிறார்கள்.

பேச்சியம்மா நம் முன் சம்பவத்தை விவரிக்கின்றார் ..

ஆமாங்க 12 ம் தேதி காலைல சீக்கரமா நான் அப்பளம் காய போட்டுட்டு சீக்கரம் வந்துட்டேனுங்கோ,அப்பறம் சாயங்காலம் போய் பார்த்த காய போட்ட அப்பளம் வடகம் பாதியா காணாம்..3g கேமராவ போட்டு பார்த்தோம் ..அதுல பார்த்தா ஒரு சின்ன பையன் அப்பளங்கள எடுத்துகிட்டு வேகமா அங்கயும் இங்கயும் வேகமா ஓடுறான்..
அவன் முகத்தை பார்க்க முடியல ..
எதோ ஒரு குரல் கேட்டுச்சுன்னு ,நல்லா எங்க காதுகளை எல்லாம் கூர்மையாக்கி கேட்டா..அதுல ஒரு குரல் இப்படி பேசுச்சு *நல்லா காஞ்ச அப்பளமா பார்த்து பொறுக்கு* டேய் அத எடு சீக்கரம் சீக்கரம் யாரோ சொல்றாங்க ..

கோபிநாத் நம்மிடம் விளக்குகிறார் ..

அப்பளம் காயப்போடும் இந்த சீசனில் ஒரு சிறுவன் 40 டிகிரி கத்தரி வெயிலில் செருப்பு கூடப் அணியாமல் அப்பளத்தை திருடுகிற காட்சி நம்மை உறைய வைத்தது ..அப்பொழுதுதான் அங்கு ஒரு குரல் நல்ல காய்ந்த அப்பளமாக பார்த்து பொறுக்கு என்று அவனை வழி நடத்துக்கிறது ..மீண்டும் அவன் வெறித்தனமாக அப்பளம் பாதியை இழுத்துச் செல்கிறான் .அப்படியும் அடங்காத அந்த குரல் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கே அதையும் சேர்த்து சுருட்டுடா என்று அதிகார குரலில் அந்த பச்சிளம் சிறுவனை பாடாய் படுத்துகிறது ..
இது குறித்து மேலும் சில பரபரப்புத் தகவல்களை நமக்கு விளக்குகிறார் பேச்சியம்மா ..

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட இப்படிதாங்க எழுமிச்சம்காய் காயப் போட்டோம்,அதையும் திருடிட்டு போய்ட்டாங்க ..சண்டாள பாவிங்க நாங்களே பக்கத்து தோட்டத்து வாட்ச்மேனுக்கு ஐந்து ரூவா கொடுத்து அடுச்ச பழம்ங்க என்று கூறிய பிறகு அவர்கள் பேச முடியாமல் கண்ணீர் விடுகிறார்..

இப்படி அந்தத் தெருவில் பல திருட்டு தகவல்களை கூறிக் கொண்டிருந்த போது பொன்னம்மா ஒரு சுவையான தகவலை அளித்தார்..ஒரே சிறுவன் தான் அனைத்து வீடுகளிலும் இதே திருட்டை செய்வதாகவும் ..அவனை ஒரு பெண் குரல் வழி நடத்துவதாகவும் நம்மிடையே வருத்தத்துடன் தெரிவித்தார் ...

இப்படி திருடுவதற்கு எண் கிட்ட கேட்டா நானே இதயம் நல்லெண்ணெய்ல பொருச்சு தர மாட்டேனா என்று கதறுகிறார் கல்லுகுழி முனிமா ..இத்துடன் முடிவே இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்த கிராமத்து மக்களிடம் இருந்து நாம் வெளியே வந்தோம் ...

இப்பொழுது கேமரா கோபிநாத்தின் முன்

அப்பளம் காய வைப்பது அவரவர் உரிமை...அனால் அதை காணாமல் காயப் போடுவதும் அவரவர் கடமை...இதை விட்டு விட்டு ஒப்பாரி வைப்பது கும்பலாக ஓடுவது ..தனியார் தொலைக்காட்சிகளுக்கு கடிதம் போட்டு செய்தி பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடாமல்,நாமே நம் வீட்டில் அப்பளத்தை பாதுகாப்பதே சிறந்த வழி என்று கூறி இத்துடன் முடித்துக் கொள்வது உங்கள் அன்பு நெஞ்சம் கொண்ட கோபிநாத் ..

அடுத்த வாரம் நம் குற்றத்தில்

1) நாக்கைத் தொங்கப் போட்டுகொண்டு அலையும் தெருநாய்கள்


2) பல்லை இளித்துக் கொண்டு செல்லும் பன்னிகள்

ஒரு நேரடி விசிட் .........................................................

2 comments:

  1. மக்கள் எதைவேணும்னாலும் பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டத்தோடு இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகள் சில சமயம் தொல்லை காட்சிகளை ஒளிபரப்புவதை...தாங்கள் நக்கல் நையாண்டியுடன் சொல்லிருக்கும் விதம் ரசிக்க கூடியதாக இருக்கு தோழி...இன்னும் இது போல் நடக்கும் அனைத்தையும் தங்களுக்கே உரிய குறும்புடன் தொடருங்கள் ..

    அடுத்து வெளிவர இருக்கும் குற்றம் நடந்தது என்ன ..நிகழ்ச்சியின் நேரடி உங்கள் ரிப்போர்ட்டை எதிர் நோக்கி காத்திருக்கும் உங்கள் ரசிகன் ....

    ReplyDelete
  2. hahahahaha......... superrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete