Monday, November 21, 2011

புலம்பல்ஸ்

ஜாக்கி என்று தான் அதை அழைக்கவேணும் என தெரு குழந்தைகள் சொல்வாங்க. எங்கள் தெரு கோடி வீட்டில் தானாகவே வளர்ந்து வந்தது அந்த நாய் ..சரியாக உணவு கிடைக்காது போல் அதுக்கு ரோட்டில் யாரேனும் பை எடுத்து போனால் சுத்தி சுத்தி அவங்களை வரும் ..ஜாக்கி கடித்து விடக்கூடாது எனும் பயத்திலேயே மாடியில் இருந்து அவ்வப்போது நான் பிஸ்கட் போடுவதுண்டு ..அப்பவும் நாலைந்து என முடித்து கொள்ளாது ஒரு பாக்கெட் முடியும்வரை ஓடி ஓடி தின்று தீர்க்கும் ..மாலையில் தெருவில் குழந்தைகள் விளையாடும் பொழுது உற்சாகமாய் அதுவும் அங்கோடி இங்கோடி விளையாடிக் கொண்டிருக்கும் ..கொஞ்ச நாளா உற்சாகம் இல்லாம சோர்ந்து படுத்து பார்த்துகிட்டு இருக்கும் குழந்தைகளோட விளையாடாம ..






அன்றைக்கும் பக்கத்துக்கு வெற்று பிளாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறதென நினைத்தேன் ..குழந்தைகள் ஆரவாரம் பண்ணிட்டு இருந்தாங்க தெருவில் ஆனால் ஜாக்கி அந்த வெற்று பிளாட்டில் சற்றும் அசைவில்லாம படுத்து இருந்தது மனசுக்கு உறுத்தலா இருந்துச்சு ...பின்பு அதை நானும் மறந்துட்டேன் ..மறுநாள் பொழுது விடியும் பொழுதே மழை பொழுதாகிற்று .. பிரஷ் செய்துகொண்டே ஜன்னலை திறந்து பார்த்தா அடிக்கிற மழையில் ஜாக்கி ஆடாமல் அசையாமல் கிடந்தது அந்த பிளாட்டில் ..மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு சங்கடம், அது வாழ்ந்து வந்த வீட்டில் யாரேனும் இருக்காங்களா என்று பால்கனி வழியா பார்த்தேன். ஒருவரும் கண்ணில் தென்படவில்லை ..பார்த்தால் சொல்லலாமென என் வேலையில் மூழ்கலானேன் ..

மாலை வேலை முடிச்சு எப்பவும் போல் குழந்தைகளை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தபோது தான் ஜாக்கி ஞாபகம் வந்துஜன்னல் வழியே பார்த்தால் அதே இடத்தில அசைவற்று கிடந்தது ..தெருவில் விளையாடிகொண்டிருந்த குழந்தைகளிடம் ஜாக்கியை பாருங்க ஏன் இப்படி படுத்திருக்கு என்று சொல்லவும் எல்லா குழந்தைகளும் ஜாக்கி ஜாக்கி என கத்திகொண்டே அதுகிட்ட போய் கை தட்ட ,செடியை பிச்சு போட என ,எதெல்லாமோ சொல்றாங்க இருந்தும் ஜாக்கியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அப்புறம் அவர்களும் முடிவு பண்ணிடாங்க ஜாக்கி செத்திருச்சு என .... ஏய் வள்ளி ஜாக்கி செத்ருச்சு என சொல்லிக்கொண்டே அந்த வீட்டை நோக்கி ஓடினாங்க ..அந்த சின்ன பொண்ணும் அழுதுகிட்டே வந்து பார்த்துட்டு,அப்பா வந்ததும் தூக்கிட்டு போகலாம்னு அம்மா சொல்லிட்டாங்கனு சொல்லி அழுக , மீண்டும் எல்லாரும் ஜாக்கி ஜாக்கி என தொட்டுப் பார்க்க ஆரம்பிச்சாங்க அழுகையோடு....

கொஞ்ச நேரத்தில் மண் வெட்டும் சத்தம் கேட்டு பார்த்தால்,ஜாக்கி இறந்து போன அதே வெற்று பிளாட்டில் குழி வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன கார்ப்பரேஷனில் சொல்லாம வேறு ஒருவரின் பிளாட்டில் இப்படி பண்றாங்கன்னு பதறி, கீழ் வீட்டு பெரியவரிடம் சொல்ல, அவரு வேணாம்பா நாம வாழ வந்தவங்க இந்த ஊருக்கு. அவங்கெல்லாம் இதே ஊர்ல முப்பது வருஷமா இருக்கிறவங்க.நாம ஏதாவது சொல்ல போனால் . பேச்சு வாங்கி கட்டமுடியாது, நீ போமா நாளைக்கு கார்ப்பரேசனுக்கு நான் போன் பண்ணிக்கிறேன் என்று சமாதனம் செஞ்சு அனுப்பிட்டார் என்னை.


25 லட்சம் வரை பேரம் பேசிக்கொண்டிருக்கும் யாரோ ஒருத்தரின் பிளாட்ல கொஞ்சமும் கவலை இல்லாம ,ஏதோ அப்படியே அழுகி போகவிடாம கருணை பட்டு புதைச்சுட்டாங்க ஜாக்கியை அந்த வீட்டுகாரங்க ..
குழந்தைங்க வழக்கம் போல விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. நான் மாடியில் இருந்து பார்க்கும் போதெல்லாம் மண்மேடு தெரியும், இந்த இடத்தை யாரேனும் வாங்கி வீடு கட்டினால் ஜாக்கியோட ஆவி சுத்துமோ அங்கேயே என்று நினைப்பதுண்டு ..
. மாடியில் இருந்து ஏதேனும் சாப்பிடும் போது ஜாக்கி ஞாபகம் வரும். அந்த மண்மேட்டில் கையில் இருப்பதை வீசி எரிவதுண்டு .ஒரு வேலை கார்ப்பரேஷன் ஆட்கள் தூக்கிட்டு போயிருந்தா கூட மறந்திருப்பேன் இப்படி புலம்பிட்டு இருக்காம ..தினமும் ஜன்னல் வழியே காலை நேர இயற்கையை ரசித்த படி பிரஷ் பண்ணிகொண்டிருந்த நான், இப்பொழுதெல்லாம் பிரஷ் பண்ணும்பொழுது அந்த ஜன்னலை திறப்பதே இல்லை .......

Saturday, October 29, 2011

புலம்பல்ஸ்

அன்றாட வாழ்வில் நாமோ அல்ல நம்மையோ கடந்து போகும் விசயங்கள் பல..சில மனதுக்கு சந்தோசமாகவும் பல மனதை அலைகழிக்க கூடியவையாகவும் இருக்ககூடும் ..அதெல்லாம் அப்படியே கண்டுக்காம போய்கிட்டே இருக்கணும்னு நம்ம புலம்பல கேக்குறவங்க கெத்தா சொல்லுவாங்க ஆனா அவங்களும் கடந்து வரும் விசயங்களை புலம்பாம இருக்கமாட்டாங்க ..அதிகமா புலம்பினா இருக்கவேண்டிய இடமே வேற அதுனால அப்போ அப்போ வந்து ஏதோ என் மனத்தாங்கல இங்கே கொட்டிட்டு போக முடிவு பண்ணிட்டா இந்த குருவு ...

இன்று புலம்பிக்கிட்டு இருக்கும் நேரம் சரியா இரவு ஏழு மணி ..

சரி நம்ம வேலையையும் நம்பி லோன் தாராங்க நு ஒரு ப்ளாட்டை வாங்கலாம் என முடிவு பண்ணினா வீட்டுல இருக்கிற வயசான ஆயாக்கள் தொல்லை தாங்கல ..ஊருக்கு ஒதுக்குபுறமா கம்மியான விலையில் ஒரு இடத்தை வாங்கி போட்டு அங்கே வீடு கட்டணுமாம் பிறகு பத்து பதினஞ்சு வருஷத்தில அந்த வனாந்தரமும் பல கட்டிடங்கள் சூழ வளர்ச்சி அடைஞ்சுடும் நாங்கலாம் அந்த காலத்தில என ஆரம்பிச்சு இன்னுமும் அது முடிக்கறதுக்குள பொட்டிய தூக்கிட்டு ஊருக்கு வேலைய பாக்க வந்தாச்சு ..ஹ்ம்ம் இப்போ எல்லா வசதியோட வாழணும்னு ஆசைப்பட்டா ஆயா பதினஞ்சு வருஷம் காக்க சொல்லுது இதுக்கு சுடுகாட்டிலேயே பட்டா கிடைச்சா அங்கேயே இடத்தை வாங்கி இப்போவே ரிசேர்வ் பண்ணிக்கலாம் போல் எப்போதான் சுதந்திரமா முடிவு எடுக்க விடுவாங்களோ இந்த வீட்ல உள்ள பெரியவாஸ் எல்லாம் ..

(புலம்பல்கள் தொடரும் )


Monday, September 26, 2011

பேருந்தில் ....


ஜன்னலோர இருக்கையில்அமரும் போட்டியில்
ஆளுக்கு ஒருவராய்அமர்ந்தவேளையில்

இருக்கை மாறாமல் இருக்க

படியேறும் பயணிகளை ஆவலுடன்
நோக்கும் கண்களோ
படபடப்புடன் தேடும்
ஒரே பாலினத்தவரை ...


பெரியவரோ ,கைக்குழந்தை பெண்ணோ
சிறுவர்களோ எதிர்படும் தருணத்தில்
பாய்ந்து அழைத்து அருகில்
அமர வைத்த நொடியில் தொலைந்து
சென்றது சமஉரிமை கொள்கை

எனினும் காப்பாற்றப்பட்டது
என் ஜன்னலோர இருக்கை ,,,

*********************************************************************************************
பேருந்தில் கணவரின் தோளில்
நிம்மதியாய் சாய்ந்து உறங்கி வரும் பெண்கள் ,
கைபேசியில் நெடு நேரம் பேசிக்கொண்டு வருபவர்கள் ,
ஜென்னலோர இருக்கையில் ஆசுவாசமாக
வேடிக்கை பார்த்து வருபவர்கள் ,
இருக்கையில் அமர்ந்துகொண்டே
சேட்டை செய்து வரும் சிறார்கள்,
தின்பண்டங்களை ரசித்து உண்டு வருபவர்கள் ,
கைபேசியில் பாடல் ரசித்து கேட்டு
கண்மூடி பயணம் செய்து வருபவர்கள்,
ஒருவரேனும் அறிந்து இருக்கவில்லை
நெடு நேரம் கால் கடுக்க நின்று பயணம்
செய்து வரும் சக பயணிகளின் கஷ்டத்தை ........
..........................................................................................................................

Friday, September 2, 2011

என்ன தவம் செய்தனை .....

மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் ...ஆயர் பெண்கள் யசோதாவை பார்த்து பாடுவதை போல் அமைந்த நெகிழ்வான பாடல்..இயற்றியவர் பாபநாசம் சிவன் அவர்கள் ..ஆதி தாளம் ..காபி ராகத்தில் அமைந்த பாடல் ...






என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்யதனை யசோதா ...

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
உன் கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
நீ என்ன தவம் செய்தனை
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறமை
கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்ச வைத்தாய் கண்ணனை
தாயே என்ன தவம் செய்தனை ....

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை , புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
யசோத எங்கும் நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க என்ன தவம்
செய்தனை ...

Monday, August 29, 2011

தோ பாரு கானா பாட்டு...

கடலுக்குள்ள நண்டும்
கடைல விக்கிற நண்டும்
கம்மாகர நண்டும்
கால வாரும் மண்டு ...

டூரிங் கொட்டாய் மண்ணும்
டுடோரியல் கண்ணும்
டூப்படிக்கிற வாயும்
டுமீலுனு போகும் ....

பிட்டடுச்சு எழுதினாலும்
பீஸு கட்டணும் ஸ்கூலுக்கு
பீஸ் போன பல்ப்புனாலும்
பிடுச்சுப் பாரு ரத்தம்வரும் ...

சுட்டு சுட்டு போட்டாலும்
சும்மா கெடக்கும் அடுப்பு
தூண்டி விட்டு பாரு
காட்டையுந்தான் அழிக்கும்...

சுட்டு போடும் மேட்டரும்
துருப்பிடுச்ச மோட்டரும்
தூசு பட்ட வாட்டரும்
தூக்கி தானே வீசணும் ....

தார் ரோட்டு தாரும்
உருக்கினாத்தான் சாரும்
ஊறுகாயும் மோரும்
உப்பில்லாக்கா நோவும் ...

##########################################

அரசு பஸ்சுல
திருடும் ஆசாமி பாரு
பிடிபட்டா கூட
சிறைக்குள் இலவச சோறு ...

வெண்ணை எடுக்கா மோரும் உண்டு
வேப்பமர நிழலும் உண்டு
காவலுக்கு ஆளும் உண்டு
களி துண்ணவா நோகும் கண்ணு

அரசு பஸ்சுல
திருடும் ஆசாமி பாரு
நம்ம ஊரு சாமிய விட
safeaa இருப்பான் பல மடங்கு ஜோரு ..

############################################

itz my way athichooooodi
அ...க்கு அடுத்து ஆவன்னா
நான் பாட போறேன் கானா

இ..க்கு அடுத்து ஈயன்னா
ஈசல் வாழ்க்கை வாழாதே வீணா

உ...க்கு அடுத்து ஊவன்னா
உலகம் என்றுமே உருண்டை தானா

எ..க்கு அடுத்து ஏயன்னா
ஏட்டு சுரைக்காயா இருக்காதே நீ வீணா

ஐ..ல இருக்கு நைனா
ஐம்பதில் வளையாதென மூத்தோர் இட்டுககட்டுவதென்னா..

ஒ...க்கு அடுத்து ஓவன்னா
இது ஒன்பது வாசல் உடலண்ணா

ஔ..க்கு அடுத்து ஃன்னா
ஔவை மொழி எஃகுவால் உருதின்னா ..

#########################################################
ஆளில்லா வீதியெங்கும்
அரசியல் தலைகள் எல்லாம்
விலைபோகா சுவர்களில்
ஒட்டிக்கொண்டாங்க ....

.
ஜோக்கான சொக்காவோடு
சைகை எல்லாம் பக்காவோடு
வெத்துவேட்டு வசனத்தோடு
வெளுத்துப் போன சிரிப்போடு
ஆளுக்கொரு கொடியோடு
அருவெறுத்த சலுகையோடு--கொடும
அஞ்சு வருசம் ஒளிஞ்சுருந்த
ஒட்டு மொத்த அழுக்குகளும்
ஒன்றுகூடி இளிக்கிறாங்க இன்று
நகரெல்லாம் சொலி சொளிப்பாக,
நம் மனமெலாம் சலி சலிப்பாக .... ....


விட்டாக்க ..இடுகாட்டுப் பக்கம் கூட
வந்து நிப்பாங்க ...
எரிந்ததெல்லாம் போதுமுனு
ஓட்டு கேப்பாங்க ....

Sunday, August 28, 2011

ஒரு நண்பரின் கதை இது...






இந்த கதை எழுத எனக்கு தூண்டு கோலாக இருந்த எனது நண்பருக்கு எனது குரு வணக்கங்கள்..[ஹ்ம்ம் எனன செயய வாழ்கையே ஒரு டிராமா இப்டிலாம் துதி பாட வேண்டி இருக்கு கொடுமை டா சாமிகளா]இந்த கதையில் வரும் சம்பவங்களும் பெயரும் யாரையும் குறிப்பன அல்ல கற்பனையே என்று போடுமாறு கேட்டு கொண்டார்...[சுட்டு போட்டாலும் தோசைய தோசைன்னு சப்பாத்திய சப்பாத்தின்னு தான் சொல்வ இந்த குருவு பொய் சொல்லமாட்டா ] ஓகே கதைக்கு போகலாம் ரெடி ஸ்டார்ட் 1...2....3..****************************************************************************************************************நம்ம கதையின் நாயகன் அங்குசாமி ஒரு சாப்பாட்டு பிரியர்...எந்த அளவு சாப்பாட்டு பிரியர் என்றால் வீட்லயே சாப்பிட்டு கிட்டே இருந்தா போர் அடிக்கும்னு அழகா மந்த்லி பிளான் நோட்ல போட்டுக்கிற அளவு முன் யோசனைக்காரர் [Image]..அந்த மாசம் எத்தனை கல்யாணம் போகலாம்,யார் வீட்டுல எல்லாம் விஷேசம் வரும்.அது போக எத்தனை நாள் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு எதுவுமே ப்ளான் பண்ணி பண்ணுவார்[Image]...கஷ்டமான ட்ரைனிங் மற்றும் மொக்கையான மீட்டிங்னாலும் அங்கே கிடைக்கிற இஞ்சிடீ ,சமோசாக்காக மீட்டிங் போற அளவு மன தைரியக்காரர்[Image] ...காசு செலவானாலும் அத பத்தி கவலை இல்லை,வயிறார விதவிதமா சாப்பிடனும்னு வெளிமாநிலங்களுக்கு கூட அசராம கல்யாணம் அட்டென்ட் பண்ணுவாரு நம்ம ஹீரோ ..அதும் ஏரோபிளைன்ல போனா அவங்க கொடுக்கிறத தான் சாப்பிடனும்னு ட்ரைன்ல ரெண்டு மூணு நாள் பிரயாணம் செஞ்சாலும் பரவாயில்லை ,ஆங்காங்கே ஸ்டேஷன்ல ரயில் நிக்கும் போது அங்கே கிடைக்கிற வடை,பஜ்ஜி,சமோசா தான் சரி ருசின்னு சொல்லுறதுதான் அவரோட ரசனை[Image] ...அரசு அலுவலகத்தில தலைமை பீடத்தில தூங்குறதும் ஆர்குட்ல மற்றும் பேஷ்புக் இணையதளத்தில விவாதிக்கிறதும் தான் அவரோட தினசரி நடவடிக்கை[Image]
கதையின் முக்கிய திருப்பம் ..

நமது கதை நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது அவருக்கு மட்டும் இல்ல நமக்குமே பேரதிர்ச்சியுடன் கூடிய மாபெரும் திருப்பம் .[Image].என்னவென்றால் அதுவரை வாலிபராக இருந்த நம் கதையின் நாயகன் பதவி உயர்வு பெற்றார்[Image] ..இது உழைப்பால் உயர்ந்த பதவியல்ல ..உண்ணுவதால் உயர்ந்த பதவி [Image]..வெறும் அங்குசாமியாக இருந்தவர் அங்குசாமி அங்கிலாக மாறினார்..எப்பேர் பட்ட உணவையும் அதாவது {வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு } ஜீரணிக்கும் சக்தி கொண்ட அவருக்கு இந்த அங்கிள் என்ற பதவியை இன்று வரை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை [Image]..அலுவலகத்தில் அவருடைய நிக் நேம் A .M அதாவது அங்குசாமி மாமா என்று தெரிய வந்த போது இடிந்தே போனாலும்[Image],அவ்வப்போது ரெண்டு வடைகள் சாப்பிட்டே அந்த காயத்தை தற்போது ஆற்றிக்கொண்டார்
முதன்முறையாக கண்ணாடியின் முன் தன்னை பார்த்தபோது தான் விஸ்தாரமான தன் வயிறு[Image] முகத்திற்கும் கழுத்துக்கும் இடைவெளி இல்லாமல் இருப்பதும் ,தன் காலை தானே குனிந்து பார்க்க முடியாமல் இருப்பதெல்லாம் பார்த்து[Image] அண்ணாமலை ரஜினிகாந்த் போல சபதம் எடுத்தார் ..இந்த நாள் என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் உண்டு பண்ண போகும் நாள் ..அடுத்த வருடம் இதே நாள் இதே நேரம் நான் அஜித் போல ஆகிடுவேன் ..அது என்னால முடியும்னு முதலில் தன்னுடைய எடைய குறைக்கிற முடிவோடு உடற்பயிற்சி நிலையம் சென்றார் [Image]..எடை மெஷினில் ஏறி நின்றால் மீண்டும் மீண்டும் பூஜ்ஜியத்தையே காட்டி அவர் சதம் அடித்து அதற்கும் மேல் அவர் எடை உள்ளது என்று நிருபித்ததும் உடலை குறைத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.[Image]. ..கடையில் ட்ரக் சூட் பொருந்தாமல் ஒரு வாரம் அலைந்த கதையெல்லாம் வேறு [Image] ...தையல்காரனிடம் உடற்பயிற்சிக்கான உடைகள் தைத்து ஒரு சூறாவளி கிளம்பியதேனு பாடிக்கிட்டே உடற்பயிற்சி செய்ய ஆயுத்தமானார் ..[Image]
படுத்து எழுந்து செய்யும் உடற்பயிற்சியில்,படுத்தால் எழுந்து கொள்ள முடியவில்லை ..எழுந்தால் குனிய முடியவில்லை [Image]..இதனால் நம்ம அங்குசாமிக்கு முதன்முறையாக பயம் வந்தது ,நம்மால் செய்ய முடியாதோ என்று[:9]..இருந்தாலும் முடியுமென்று அருகருகே உடற்பயற்சி செய்பவர்களை பார்த்து ஒரு வடிவேல் லுக் விட்டு குரலை கனைத்து கொண்டு எல்லரும் பார்கிரர்களா என்று பார்த்துவிட்டு butterfly winger-ல் ஒரு அழுத்து அழுத்திநார். அந்தோ பரிதாபம் அவ்ளோதான் மிஷின் உடைந்தது ..ம்ம்ம்ம் நம்ம ஹீரோ அதற்கும் நஷ்டஈடாக rs. 30000 கட்டவேண்டியதாயிற்று [Image]..உடற்பயிற்சி நிலையத்தில் எந்த மிஷினையும் தொடாமல் மேனுவல் பயிற்சி செய்யவே அனுமதி கிடைத்தது ...எல்லா உடற்பயிற்சியும் இரண்டு முறை செய்தாலே இமாலய முயற்சியாகவே இருந்தது,அதை விட அகோர பசி உடற்பயிற்சி முடிந்ததும்,அதனால் மேலும் இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டியதாயிற்று[Image] ...இதனால் வீட்டில் வேறு ஒரே ரகளை இருமடங்கு உணவு செய்ய முடியவில்லை என்று.இது என்னடா பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்த கதையாக,அதிக பசி வந்து இன்னும் எடை கூடி போயிருச்சேனு தனக்குள்ளே உணர்ந்தார்[Image]....சரி இனிமேல் உடற்பயிற்சி போவதை நிறுத்திவிட்டு ..நண்பர் சொன்னது போல நடைபயிற்சி போகலாம் என்று நினைத்து தனது எடையை குறைக்கும் லட்சிய பாதை நடைபயிற்சியே என ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்க தயாரானார் நம் கதையின் நாயகன் A.M.......[Image]
அதிகாலை சுபவேளையில் ஷூ மாட்டிக்கொண்டு தன் நடை மற்றும் ஓட்டபயிற்சி பயணத்தை தொடர்ந்த முதல் நாளே நண்பர் சொன்னதை நினைவில் வைத்து நடந்தார் நடந்தார் நடந்து நடந்து அவர் ஊரிலிருந்து 50 km மேல் நடந்து அருகில் உள்ள சிறு கிராமத்திற்கே வந்து மீண்டும் வீடு போக வழி தெரியாமல் பஸ் இல் தன் இருப்பிடம் வந்துசேர்ந்தார்..ரெண்டாம் நாள் நடை பயணத்தில் இருட்டில் கவனிக்காமல் சாக்கடையில் விழுந்து சாக்கடையில் இருந்து பூச்சாண்டி போல கஷ்டப்பட்டு எழுந்து நடக்கும் பொழுது தெருநாய் வித்யாசமான உருவமாக இருக்கிதே என இவரை பார்த்து பயந்து ஓட யார் யாரை துரத்துகிறார்கள் என்றே தெரியாமல் அன்றைய jogging day ஜோக்கிங் டே ஆனது அங்கங்கு அடிபட்ட அங்குசாமி க்கு உடல் வலி ஏற்பட இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி,சொந்தபந்தங்கள் பூஸ்ட், ஹார்லிக்ஸ், வீவா சகிதம் வந்து பார்க்க நம்ம [அங்குசாமி ஆங்குசாமிஆனார்.மெதுஓட்ட முயற்சியும் அதோடு கனவானது.
விடா முயற்சியின் அடுத்த களம்


தொலைக்காட்சியில் ஆயுர்வேத மருத்துவர்கள் கதறும் ஒரு நிகழ்ச்சியை பார்த்து அவர்களின் ஆலோசனையில் மருந்து சாப்பிட்டு, தன் பருத்த உடம்பை சுருக்க முடிவு செய்தார்..இந்த முறை தான் நிச்சியம் ஜெயிப்போம் என்று ஒரு ஒளிவட்டம் அவர் தலையின் பின் சுற்ற ...உடல் எடையை குறைக்க செய்யும் மருந்தை 15000 கொடுத்து ஒரு மருத்துவரிடம் வாங்கி தன் விடாமுயற்சியை தொடங்கினார் .....
ஆஹா........ஆஹா !!!!!!!!!! என்ன ஒரு திருப்பம் மருந்து எடுத்த அன்றே நம்ம ஹீரோக்கு உணவைக் கண்டாலே பிடிக்காத உணர்வு ..பசிக்கவே இல்லை.[Image].வடை ,சமோசா எல்லாம் அவரைப் பார்த்து அழுதும் சிறிதும் திரும்பி பார்க்கவில்லை ,காரணம் டயட் கண்ட்ரோல் இல்லை..எது சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கத் தூண்டும் உணர்வு இருந்ததால் ,உணவைக் கண்டாலே வெறுப்பாக இருந்தது.[Image]..வீட்டில் செய்த உணவுகள் எல்லாம் தினமும் பெருமளவில் குப்பைத்தொட்டிக்கே போகும் அளவு உணவைக் கண்டாலும் காணாததுபோல் ஒதுங்கியே இருந்தார்..ஒரு வாரம் ஆகிற்று,இன்னும் ஒரு மாதம் இந்த மருந்தினால் அங்குசாமி மாமா,அங்கு ஆகிருவோம் என்ற கனவில் alps,italy,athens ஆகிய பல பல நாடுகளில் dream song அவருக்கு பிடித்த ஆம்பல் அழகியுடன் பாடி ஆடி கொண்டும் ,அவருக்கு உலக அழகன் பட்டம் கொடுப்பது போன்றெல்லாம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்த ஒரு அதிகாலை வேளையில் பயங்கரமான வயிற்று வலி வர தூக்கம் கலைந்து முழித்தார்[Image]. வாயிற்று வலியின் தீவிரம் தாங்காமல் மயங்கி மீண்டும் கண் விழித்த வேளையில் மருத்துவமனையில் இருந்தார்.......
என்னதான் பருத்த உடல்வாகு கொண்டவராய் இருந்தாலும்,அவருடைய குடல் சிறிதாகிற்றே[Image]...ஆமாம் அவருடைய சிறுகுடலுக்கு ஒரு வாரம் வேலை கொடுக்காமல் லீவு விட்டதில் enzymes குடலை நன்கே பதம் பார்த்திருந்தன. [Image]அமிலங்களின் பெருங்கோவத்தை அடக்க ஒரே தீர்வு ஒரு நாளைக்கு ஏழு முறையாவது உணவு உட்கொள்வதே சிறந்த மருந்து என டாக்டர்களின் prescriptionil எழுதப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு துரத்திவிடப்பட்டார்[Image]...வீட்டிற்கு வந்ததும் வேறு என்ன வேலை,மீண்டும் அலுவலகத்திற்கு விடுமுறை...ஒரு வார உணவையும் ஒரே நாளில் விதவிதமாக காரம் இல்லாமல் உட்கொள்ள ஆரம்பித்தார்[Image]..விட்ட ஒரு வார பணியை medical leave ல் தொடர்ந்தார்....மூன்று வேளை உணவை போட்டு மாளமுடியாத வீட்டில் ஏழு வேளைகள் செய்ய பெரிய அவஸ்தை ஆகிப்போனது ........
ஒரு வழியாக வயிற்றுவலி சரியானதும்,மீண்டும் அலுவலகம் செல்ல எத்தனித்து,தன்னை அழகு படுத்திக்கொள்ள கண்ணாடியை நாடினார் நம்ம A.M. கண்ணாடி பார்த்த நொடியில் மயக்கம் வந்து விட்டது நம்ம ஹீரோக்கு[Image],காரணம் கண்ணாடியில் ஹீரோவின் பாதி உடல் தான் தெரிந்தது..மீதி பாதி உடல் கண்ணாடி விட்டு வெளியில் இருந்தது ...இருந்தும் மனதை திடபடுத்திக்கொண்டு,மனதிற்குள் இது தான் நம் தலை எழுத்து என்று யோசித்தாலும்,அவருடைய positive attitude இப்படி யோசிக்க வைத்தது,,இந்த உணவோடும் தூக்கத்தோடும் எவ்வளவு இன்பமாக இருந்தோம்,எதற்கு இந்த வேண்டாத பல பல பிரச்சனைகள் , மாமா என்ன தாத்தா என்றே கூப்பிட்டாலும் இனிமேல் என்னையும் என் நாவிற்கு சுவை தரும் உணவையும் என்னால் பிரிந்து இருக்கவே முடியாது என்று சபதமேற்கொண்டு, காலையில் சாப்பிட்ட தோசை பற்றாத உணர்வு ஏற்பட அன்னபூர்ணா ஹோட்டலில் நுழைந்தார் நம்ம அங்கு சாமி மாமா..
இந்த கதையை படித்து விட்டு வேறு யுனானி பினானி சித்தா பித்தா போன்ற வைதியர்களோ மேலும் செயின் necklace நெட்வொர்க் சேர்ந்த amway amout போன்ற தொல்லை தரும் நிறுவனங்களோ அவரை தொடர்பு கொண்டு மருந்து என்னும் பெயரில் பணம் சம்பாதிக்க நினைத்தால் கொலையும் செய்து விட்டு ஜெயில் சாப்பாடு ருசிக்கவும் தயார் என்றும் வேண்டுமென்றால் சமையல் நிகழ்சிகளுக்கு நடுவராகவோ,ஹோட்டல் திறப்பு விழாக்களுக்கு குத்துவிளக்கு ஏற்றவோ ,இந்திய எல்லைக்கு உட்பட்ட இடங்களாக இருந்தால் தன் செலவிலேயே எங்கும் வர தயாராக உள்ளார்... மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள

anguavailable@annapoornavilas.com
phone no:9940415837

Friday, October 29, 2010

ராஜினாமா கடிதம்

ஒரு ஆசிரியரின் ராஜினாமா கடிதம் இது..













ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை பார்த்து பயப்படுகிறார்கள்......

தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிறுவனரை பார்த்து பயப்படுகிறார்கள் ......

பள்ளி நிறுவனர் மாவட்ட கல்வி அதிகாரியை பார்த்து பயப்படுகிறார்கள் ......

மாவட்ட கல்வி அதிகாரி கல்வி அமைச்சரை பார்த்து பயப்படுகிறார்கள் ......
.
கல்வி அமைச்சர் முதல்வரை பார்த்து பயப்படுகிறார்கள் .......

முதல்வர் அடுத்து வரும் தேர்தலில் வாக்காளரை பார்த்து பயப்படுகிறார்கள் ........

வாக்களர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து பயப்படுகிறார்கள் ........

அனால் இந்த குழந்தைகளோ யாருக்கும் பயப்படுவது இல்லை[:௦O]

எனவே நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்....


எப்புடி[8)]!!!