Friday, October 29, 2010

ராஜினாமா கடிதம்

ஒரு ஆசிரியரின் ராஜினாமா கடிதம் இது..













ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை பார்த்து பயப்படுகிறார்கள்......

தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிறுவனரை பார்த்து பயப்படுகிறார்கள் ......

பள்ளி நிறுவனர் மாவட்ட கல்வி அதிகாரியை பார்த்து பயப்படுகிறார்கள் ......

மாவட்ட கல்வி அதிகாரி கல்வி அமைச்சரை பார்த்து பயப்படுகிறார்கள் ......
.
கல்வி அமைச்சர் முதல்வரை பார்த்து பயப்படுகிறார்கள் .......

முதல்வர் அடுத்து வரும் தேர்தலில் வாக்காளரை பார்த்து பயப்படுகிறார்கள் ........

வாக்களர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து பயப்படுகிறார்கள் ........

அனால் இந்த குழந்தைகளோ யாருக்கும் பயப்படுவது இல்லை[:௦O]

எனவே நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்....


எப்புடி[8)]!!!

படித்ததில் ரசித்தது


ஒகில் சந்திர சென் என்பவர் ,1909 இல் ரயில்வே (பிரிட்டிஷ்) தலைமை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார்.. இந்த தகவல் இந்திய இங்கிலிபீஸ் பற்றி பின்னு.கே.ஜான் என்பவர் எழுதிய ஒரு சுவையான புத்தகத்தில் வந்ததுள்ளது..

[படிக்க மொழி பெயர்க்க முடிந்தவர்கள் அதை முயற்சி செய்து பார்க்க ..நான் லாம் ரிஸ்க் எடுக்க தயார் இல்லை ...]




i am arrive by passenger train ahmedpur station and my belly is too much swelling with jackfruit....i am therefore went to privy...just i doing the nuisance that guard making whistle blow for train to go off and i am running with lotah in one hand and dhoti in the next when i am fall over and expose all my shocking to man and female women on platform ,...this too much bad,if passenger go to make dung that dam guard not wait train five minutes for him.i am therefore pray your honour to make big fine on that guard for public sake.otherwise i am making big report to the papers....

ஆச்சர்யம் இந்த கடிதத்தை படித்த பிறகுதான் இந்திய ரயில்வே களில் toilet அமைக்க பட்டனவாம் ...உடனே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் பயந்த காரணம் இன்னொரு இங்கிலிபீஸ் கடிதம் மறுபடியும் வந்துவிடும் என்றோ ????

Monday, May 31, 2010

தீராக் காதல்









என்னுடைய சிறு வயதிலிருந்து அப்பாவிடம் கிரேக்க கதைகள் கேட்டு என்னை இளவரசியாகவே பாவித்து வாழ்ந்து வளர்ந்ததுண்டு.. என்னுடைய உலகத்தில் வெள்ளை மலர்களே என்னுடையே தோழி... காடுகளும் மலைகளும் நீர் வீழ்ச்சிகளுமே என்னுடைய வசிப்பிடம்.. என்னுடைய அறையில் எந்த திரை நட்சத்திரங்களோ பொம்மைகளோ அலங்கரித்ததில்லை, முழுவதுமே வெள்ளை மலர்களுடன் கூடிய காடுகளில் இயற்கையுடன் விளையாடி அலைந்துகொண்டிருக்கும் சிறு பெண்ணே எண்ணின் உலகமாய் இருந்தது. என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்புவரை.. ...... கல்லூரி வாழ்க்கையில் அடிஎடுத்து வைத்த போது முதல்முறையாய் என்னுடைய பால்ய வயது தோழி பிரியா என்னிடம் ஒரு குறுநாவல் அறிமுகம் செய்து என்னை படிக்க வைத்தாள்.. நாவல் பெயர் இரும்புக் குதிரைகள் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடையது.. தமிழில் நான் படித்த முதல் நாவல் எனினும் எழுத்தாளரின் கதை அந்த அளவு என்னால் புரிந்து கொள்ள முடியாவிடிலும் அவருடைய குதிரை பற்றிய கவிதை என்னை மிகவும் ஈர்த்தது ... ......எழுத்தாளர் குதிரையின் குண நலன்களாக விவரித்திருந்த கவிதைகள் என்னை குதிரையின் மேல் தீரா காதலை வளர்த்தது.. அன்றிலிருந்து இன்று வரை தீரா காதல் குதிரைகளின் மேல்எனக்கு.. கற்பனை உலகின் இளவரசியான நான் என்னுடைய பயணத்தை அன்றிலிருந்து காடுகளில் குதிரைகளிலே பயணிக்க ஆரம்பித்தேன் இன்று வரை ... பாலகுமாரன் அவர்களின் குதிரை கவிதைகள் **இரும்பு குதிரைகள்** நாவலிலிருந்து உங்களின் பார்வைக்கும் இதோ..





குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டு கதறுவதில்லை
வழியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்குப் பணிந்து போகும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்...


....................................................................................
குளம்படி ஓசை கவிதை
குதிரையின் கனைப்பு கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்....

.....................................................................................



குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய் பறவை போல
இலக்குகள் குதிரைகள் இல்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கி கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கிலா மனிதர் பெரியோர்!!!
உள்ளவர் அடையமாட்டார்..
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்..
.....................................................................................


நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்து பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போல

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினை போக்கும் குதிரை
தொட்டதும் விழித்து கொள்ளும்
தொடுதலை புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்

குதிரைகள் கண்கள் மூடி
விறைத்து நிற்கும் காட்சி

யோகத்தின் உச்சகட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்...
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்..

.....................................................................................

சவுக்கடி பட்ட இடத்தை
நீவிட தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இது ஓர் சுகம் தான் என்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்.
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்..
.....................................................................................

நீர் குடிக்க குனியும் குதிரை
நிழல் தெரிய பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்..
சீர் குணம் அறியமாட்டார்
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று


குழப்பத்தை தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வெய்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமே என்றெண்ணி

குளம்பது விளிம்பில் நிற்கும்.

குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குழம்பை பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்....
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்....

.....................................................................................
அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சு பூனைகள் கொண்டதிங்கே
கூறிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு

பச்சோந்தி நிறத்தை மாற்றும்

பல்லிவால் விசத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்தது எனன ???

வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய் கொள்ள
விருப்பமுடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விசமும் இல்லை
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்...???

குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்..

.....................................................................................
உழைப்புக்கே குதிரை என்ற
பெரும்போக்கு ஒரு நாள் உடையும்
குரங்குகள் மனிதர் போல
வந்ததென்பது உண்மை என்றால்
முகம் மட்டும் மனிதர் கொண்டு

குதிரை வரும் மடி மீது வீணை போட்டு
மழைக்கான வேதம் பாடும்
இரு காலில் புவிஈர்ப்பை
ஏந்திய குதிரை புத்தி
உலகத்தின் மாயை மாற்றும்
சகலமும் கவிதையாகும்
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரை யாவர்

மறுபடி குதிரையாகி
மனிதரை காண வருவர்


.....................................................................................


இப்படி ஆக குதிரை கவிதை படித்து உருவான குதிரை காதல் இன்னும் பயணித்து கொண்டுதான் இருகின்றது என்னுள்... காலங்கள் மாறி நான் முதுமை அடைந்தாலும் குதிரை மீதான என்னின் பயணம் என்றும் தொடரும் காதலின் இளமை மாறாமல்....

Tuesday, March 23, 2010

குற்றம் நடந்தது என்ன ஒரு காமெடி ரிப்போர்ட்

கோபிநாத் ஸ்டைலில் படிக்கவும்



இது ஒரு கோடை காலம் மொட்டை மாடிகளில் அப்பளம் செய்ய தகுந்த காலமும் கூட .....அப்படி இருக்கையில் ஒரு சம்பவம் நடந்தது என்ன ..வாருங்கள் பார்க்கலாம்


சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் செல்லும் வழியில் 12.45km தூரம் சென்றால் மஞ்சக்கான் பட்டி என்ற ஒரு அழகிய கிராமம்..அங்கு வறண்ட வயல்களும்,வாடிய முகங்களும் காட்சி அளிப்பதைப் பார்த்து நாம் அந்த பக்கம் வீடியோ கேமராவைத் திருப்பாமல் வேறு பக்கம் தப்பித்து அல்லாடி சென்று கொண்டிருக்கும் போது,அப்பள திருட்டுத் தெரு எங்கிருக்கு என்று அங்கிருந்தவர்களை கேட்டதும் எல்லோரும் கேமரா முன் பல் இளித்துக்கொண்டு வழி சொன்னார்கள் ....


அந்த அப்பள திருட்டு தெருவில் நாம் நுழைந்தோம் !!!

அங்கே எட்டாம் எண் வீட்டினுள் நுழைந்த போது ..வீட்டின் உரிமையாளர் பேச்சியம்மா வரவேற்றார்..சம்பவம் இது தான் ...அந்த தெரு முழுவதும் அப்பளம் விற்று பிழைப்பு நடத்துபவர்கள் .சில காலமாக காய வைக்கும் அப்பளங்கள் காணாமல் போகின்றன.அதற்காகவே அந்த தெருவில் உள்ள அனைவரும் செலவு செய்து 3g கேமரா வரவழைத்து கண்காணிக்கிறார்கள்.

பேச்சியம்மா நம் முன் சம்பவத்தை விவரிக்கின்றார் ..

ஆமாங்க 12 ம் தேதி காலைல சீக்கரமா நான் அப்பளம் காய போட்டுட்டு சீக்கரம் வந்துட்டேனுங்கோ,அப்பறம் சாயங்காலம் போய் பார்த்த காய போட்ட அப்பளம் வடகம் பாதியா காணாம்..3g கேமராவ போட்டு பார்த்தோம் ..அதுல பார்த்தா ஒரு சின்ன பையன் அப்பளங்கள எடுத்துகிட்டு வேகமா அங்கயும் இங்கயும் வேகமா ஓடுறான்..
அவன் முகத்தை பார்க்க முடியல ..
எதோ ஒரு குரல் கேட்டுச்சுன்னு ,நல்லா எங்க காதுகளை எல்லாம் கூர்மையாக்கி கேட்டா..அதுல ஒரு குரல் இப்படி பேசுச்சு *நல்லா காஞ்ச அப்பளமா பார்த்து பொறுக்கு* டேய் அத எடு சீக்கரம் சீக்கரம் யாரோ சொல்றாங்க ..

கோபிநாத் நம்மிடம் விளக்குகிறார் ..

அப்பளம் காயப்போடும் இந்த சீசனில் ஒரு சிறுவன் 40 டிகிரி கத்தரி வெயிலில் செருப்பு கூடப் அணியாமல் அப்பளத்தை திருடுகிற காட்சி நம்மை உறைய வைத்தது ..அப்பொழுதுதான் அங்கு ஒரு குரல் நல்ல காய்ந்த அப்பளமாக பார்த்து பொறுக்கு என்று அவனை வழி நடத்துக்கிறது ..மீண்டும் அவன் வெறித்தனமாக அப்பளம் பாதியை இழுத்துச் செல்கிறான் .அப்படியும் அடங்காத அந்த குரல் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கே அதையும் சேர்த்து சுருட்டுடா என்று அதிகார குரலில் அந்த பச்சிளம் சிறுவனை பாடாய் படுத்துகிறது ..
இது குறித்து மேலும் சில பரபரப்புத் தகவல்களை நமக்கு விளக்குகிறார் பேச்சியம்மா ..

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட இப்படிதாங்க எழுமிச்சம்காய் காயப் போட்டோம்,அதையும் திருடிட்டு போய்ட்டாங்க ..சண்டாள பாவிங்க நாங்களே பக்கத்து தோட்டத்து வாட்ச்மேனுக்கு ஐந்து ரூவா கொடுத்து அடுச்ச பழம்ங்க என்று கூறிய பிறகு அவர்கள் பேச முடியாமல் கண்ணீர் விடுகிறார்..

இப்படி அந்தத் தெருவில் பல திருட்டு தகவல்களை கூறிக் கொண்டிருந்த போது பொன்னம்மா ஒரு சுவையான தகவலை அளித்தார்..ஒரே சிறுவன் தான் அனைத்து வீடுகளிலும் இதே திருட்டை செய்வதாகவும் ..அவனை ஒரு பெண் குரல் வழி நடத்துவதாகவும் நம்மிடையே வருத்தத்துடன் தெரிவித்தார் ...

இப்படி திருடுவதற்கு எண் கிட்ட கேட்டா நானே இதயம் நல்லெண்ணெய்ல பொருச்சு தர மாட்டேனா என்று கதறுகிறார் கல்லுகுழி முனிமா ..இத்துடன் முடிவே இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்த கிராமத்து மக்களிடம் இருந்து நாம் வெளியே வந்தோம் ...

இப்பொழுது கேமரா கோபிநாத்தின் முன்

அப்பளம் காய வைப்பது அவரவர் உரிமை...அனால் அதை காணாமல் காயப் போடுவதும் அவரவர் கடமை...இதை விட்டு விட்டு ஒப்பாரி வைப்பது கும்பலாக ஓடுவது ..தனியார் தொலைக்காட்சிகளுக்கு கடிதம் போட்டு செய்தி பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடாமல்,நாமே நம் வீட்டில் அப்பளத்தை பாதுகாப்பதே சிறந்த வழி என்று கூறி இத்துடன் முடித்துக் கொள்வது உங்கள் அன்பு நெஞ்சம் கொண்ட கோபிநாத் ..

அடுத்த வாரம் நம் குற்றத்தில்

1) நாக்கைத் தொங்கப் போட்டுகொண்டு அலையும் தெருநாய்கள்


2) பல்லை இளித்துக் கொண்டு செல்லும் பன்னிகள்

ஒரு நேரடி விசிட் .........................................................

Monday, March 1, 2010

மின்னஞ்சலில் எனக்கு வந்த கேள்வி கணைகளும் அதற்கான எனது பதில்களும் :..




பெண்களிடம் தப்பித் தவறி கூட கேட்கக் கூடாத சில கேள்விகள்!

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!////////////////////

மானுக்கு பதுங்கிய புலியும்,பொண்ணுக்கு பயந்த ஆணும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு எங்க ஊரு நாட்டாமை சொல்லுவாரு அதுனால நீங்க பயபடாம பொண்ணுங்க கிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டா சூப்பரா பொட்ல அடுச்சு பதில் சொல்வாங்க இப்படித்தான் ...

1) பொண்ணுங்க யாரும் recharge பண்ண சொல்லுறதில்ல , நீங்களா ஐயோ நம்மள கூட ஒரு பொண்ணு லவ் பண்ணுறாங்கனு அசடு வழிஞ்சுகிட்டு நீங்களா சொல்லி மாட்டிக்கிறது .. கஷ்டப்பட்டு படிக்க வெச்ச parents ஏதும் கேட்டா செவுடு மாதிரி ஒன்னும் செய்யாத உங்களுக்கு இப்படிலாம் தண்டனை கண்டிப்பா வேணும்தான்.கரும்பு தின்ன கூலியா அதுனால பொண்ணுங்க அப்படித்தான் இருப்பாங்க .

.....................................................................................

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க? ///////////

2) ஆமாம் recharge பண்ணின தொகை முடிந்து போன நீங்கதானே மறுபடியும் காசு செலவளிக்கணும் அதுக்கு பாவம் பாத்துதான் பொண்ணுங்க ஷார்ப்பா கட் பண்றாங்க.. இதுக்கு லாம் போய் படிக்க அவசியமே இல்ல.சிந்திக்கிற தன்மை இருந்தா போதும் அது எங்களுக்கு நிறையாவே இருக்கு..

.....................................................................................
3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ‘ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?////////////////////

3) வடிவேல் சொல்வாரே எங்க அக்கா sooper பிகர்னு அந்த கதையா அட்டுவா பேசறது ,அப்புறம் தத்துவம் என்ற பேர்ல நெட் ல சுட்டத, தான் சொல்ற மாதிரி சொல்றது ,ஹாலிவுட் ஹீரோ லெவல் கு புருடா விடுறது இந்த கோமாளித் தனத்தை எல்லாம் கேட்டா சிரிக்காம என்ன செய்வாங்களாம் ???
.....................................................................................
4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக் கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேசத் தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம்.
அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க//////////////////

4) ஆமாம் நாங்க புத்திசாலிங்க அதுனால தான் உங்களயே பேச விடுறோம் ....எங்க கலயாணத்துக்கு அப்புறம் தான் உங்க பேச்சே மாறிடுமே அதுனால கிடைச்ச சந்தர்ப்பத்த விடாம எங்களுக்கு அடிக்கிற ஜிங் ஜாக்க அமைதியா ரசிச்சு அப்போவே கேட்டு முடிசிடுறோம் ...
.....................................................................................

5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க?

இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா //////////////////////


5) ஹையோ ஹையோ குறுந்தகவல் அனுப்புரப்போ உங்க திருமுகம் அதுல தெரியாது அதுனால ரொமாண்டிக்கா அனுப்பிடுறோம் . அதே நேர்ல சொல்லு சொல்லுனு கொடுமை படுத்துரப்போ உங்க முகங்களா பாத்தா ரொமாண்டிக் அ சொல்லவா முடியும் சரி உங்க மனசு இதயம் மூளை கிட்னி லிவர் இதெல்லாம் கஷ்ட பட்ற கூடாதுன்னு வெக்க படுற மாதிரி நடிக்றோம்...

.....................................................................................
6. ‘ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்?’ அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன்… இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க.

இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?/////////////

6) எப்பவும் உங்கள பத்தியே புராணம் சொல்லி உயிரை எடுக்கிறது,அப்புறம் எப்படி உனக்கு தெரியும் இதுனு அம்னிசியா patient மாதிரி கேட்டா அப்டித்தான் பொய் சொல்லுவோம் ...இதுக்கு டைரக்டர் கிட்டலாம் போய் அசிஸ்டென்ட் ஆக வேண்டாம் பொய் சொல்ல தெரிஞ்சா போதும் ...

.....................................................................................

7. Loss of Pay’ ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?///////////////

7) ஹ்ம்ம் எதோ பைக் race ல கலந்துகிட்ட வீரர் மாதிரி கனவு கண்டுகிட்டு,.ரோட் ல வண்டி ஓட்றோம்னு எண்ணம் இல்லாம track ல ஓட்ற மாதிரியும் ,கோல்ட் மெடல் உங்களக்கு யாரும் குடுக்கிற மாதிரியும் தண்ட கனவுல வேற எண்ணத்தோட ஸ்பீட் ல போன நாங்க எப்படி உங்கள நம்பி கூட வரமுடியும்...எதோ தப்பிச்சீங்க கைப்பைய நடுவுல வைக்கிறோம் . இதே கத்திய நடுவுல வெச்ச உங்க நிலைமையெல்லாம் என்ன ஆகும்... நாங்கலாம் ரொம்ப இரக்கம் உள்ளவங்க சரியா ...
.....................................................................................

8)நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்.
ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா///////////////


8) இந்த gift விசயத்தில உண்மை என்னான்னா கல்யாணத்துக்கு தான் நாங்க உங்களக்கு பேங்க் பாலன்ஸ்ல இருந்து வாகனம்,வீட்டு உபயோகப்பொருள் எல்லாம் தண்டம் அழுகிறோம்... அதுக்கெல்லாம் காசு சேமிக்க வேணாம் அதுதான் விலை மலிவான பொருள் கிபிட் பண்றோம்..ஏன் இந்த பேராசை உங்களக்கு எல்லாம்.. நீங்க லிஸ்ட் போட்ருக்க ஏதும் நாங்களா கேக்கமாட்டோம் நீங்களா வட்டிக்கு கடன் வாங்கி இதெல்லாம் வாங்கினதும் இல்லாம கஞ்ச தனமா பில்லையும் யும் எங்க கண்ல படர மாதிரி வைக்கிற உங்க திறமைக்கெல்லாம் கண்டிப்பா கலைஞர் கிட்ட சொல்லி award தான் தரனும்...

.....................................................................................
9) “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே.

இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.///////////////////

9) ஆமாம் டெய்லி எங்கள ஒரு காரணமா சொல்லி நீ பாக்கல,சிரிக்கல,சரியா பேசலைன்னு பொய்ய சொல்லி புல் மப்புல போய்டுவீங்க நாங்க எந்த தெரு நாய்; சொறி நாய் கடிச்சதோன்னு ஒரு கவலைல தூக்கம் வராம கால் பண்ணின அட்டென்ட் பண்ற நிலமைலையா இருப்பீங்க இதுல மனசாட்சியே இல்லாம பொய் சொல்றோம்னு சொல்ற உங்கள எல்லாம் நாய் என்ன பேய் அடிச்ச கூட தப்பே இல்ல...
.....................................................................................

10) நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?


இந்த கேள்வியெல்லாம் தப்பி தவறி கேட்டுட்டு, நீங்கள் அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல/////////////


10) நாங்க சொல்லாததெல்லாம் நீங்களே செஞ்சு *பொருக்கி* வெச்சுகிட்டு உங்கள நீங்களே குப்பைதொட்டினு சொல்ற அளவு self confidence இல்லாம இருந்தா லைப் ல ரொம்ப கஷ்டம்ங்க... தன்னம்பிக்கை வளர்த்துக்கோங்க.....உங்கள பேங்க் லாக்கர்னு வேணும்னா சொல்லிக்கோங்க .....



ஆண்களே ரொம்ப குழப்பத்தில இருக்கீங்க போல
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடுங்க .பாவம் இல்லாததைப் பத்தி உங்க கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லை ...
*************************************************************************************
பின்குறிப்பு: இதே படிச்சுட்டு மீண்டும் ரூம் போட்டு தண்ணி அடிச்சு யோசிச்சு பதில் தர முயல வேண்டாம்.. இதுக்கு பதில் அடிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு உங்க தப்ப திருத்திக்கிட்டு உங்க துணையோட சந்தோசமா இருக்க இந்த குருவு வாழ்த்துறா . ... வரட்டா
*************************************************************************************

Sunday, February 28, 2010

சுயம்




கௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது ஒருவன் அவரிடம் *நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ,ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் ? என்று ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை ?* என கேட்டான் ....

புத்தர் நண்பரே ஒரு வேலை செய் மலையில் கிராமத்துக்குள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வா.ஒரு பட்டியல் தயார் செய்;

ஒவ்வொரு வருடைய பெயரையும் எழுது;அதற்கெதிரே அவன் அடைய விரும்புவதையும் எழுது ..

அவன் சென்று அனைவரையும் விசாரித்தான்...அனைவரும் பதில் அளித்தனர்..இரவு புத்தரிடம் சென்று தனது குறியீட்டை அளித்தான்..

புத்தர் இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என்று கேட்டார்..

அவன் ஆச்சரியம் அடைந்தான் ..அந்த பட்டியலில் ஒருவர் கூட தமது விருப்பம் மோட்சம் அடைவது என்று எழுதவில்லை ..

புத்தர் ஒவ்வொரு மனிதனும் அடையமுடியும் என்றே நான் கூறினேன்..ஆனால் ஒவ்வொரு மனிதனும் அடைய விரும்பு கிறார்கள் என்று கூறவில்லை.. என்றார்...

யார் எதை விரும்புகிறார்கள் என்பது முக்கியம்..சுயத்தையே தெரியாதவன் எப்படி சுயத்தை முன்னேற்ற முடியும் ??????

Saturday, February 27, 2010

ஒவ்வொரு ஜனனமும் மரணமே

முதுமை இளமையின் தொடர்ச்சி...இளமை முதுமையின் தொடக்கம் ...
பிறப்பு என்பது மட்டுமல்ல..அதுவும் ஒரு மரணம்தான்...
பிறப்பின்போது ஏற்படும் நடுக்கத்தை நாம் ஞாபகத்தில் முடிந்து வைத்திருப்பதில்லை..


ஒரு கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்...





ஒரு கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்...

*நாம் இருக்கும் அறையின் சுவர்கள் சிரிதாகின்றனவா ?பெரிதாகின்றனவா? *

*தெரியவில்லை அனால் நெருக்கடியாக இருப்பது போல தோன்றுகிறது *

*ஒரே மாதிரியான மந்தமான வாழ்க்கை*

*நிச்சயமாக இல்லை ...நாம் சுவசிக்கவோ உணவருந்தவோ தேவை இல்லை..மிதந்தால் போதுமானது *

*ஆனால் இது மட்டும் இருத்தலுக்கு போதுமானதா?*

*நீ கவலைபடாதே!*

*நான் பிறப்பு என்று ஏதோ கேள்விபட்டேன் *

*எல்லாம் வதந்தி* என்றது மற்றொன்று .

அடுத்தநாள் காலை ஒருவித சுருக்கம் இருவரையும் எழுப்பியது....
*ஒ! பெரிய பூகம்பம் * என்றது ஒன்று..
*வீடு தகர்கிறது* என்றது மற்றொன்று .
*நான் நழுவுகிறேன்*.
*எங்கே போகிறாய்*
*தெரியவில்லை ...உதவி புரிவாய்*
*என்னால் முடியவில்லை*
*நான் போய்வருகிறேன் சகோதரா?*
*இது உண்மையாகவே பயங்கரம் * என்ற இரண்டாவது குழந்தையும் நழுவ தொடங்கியது..நிச்சயம் நமது எல்லாவற்றிற்குமான முடிவு என்று நினைதுகொண்டது..

இந்த சின்ன உருவக கதையை மரணத்திற்கும் ,ஜனனத்திற்கும் ஆனா,தொடர்பாக நினைத்து பார்க்க முடியும்..

ஒரு குழந்தை பிறக்கிறது..பிறக்கும்போது அது ஓவென்று அழுகிறது..நம்மை பொறுத்தவரை எது ஜனனமாக இருக்கிறதோ அது அந்தக் குழந்தையை பொறுத்தவரை ஒரு மரணம்...

பாதுகாப்பான சூழலில் ,உண்ணவேண்டிய அவசியமின்றி சுவாசிக்க வேண்டிய நிர்பந்தமின்றி எல்லாவற்றையும் தனக்காக வேருவோருவர் செய்யும் சூழலிருந்து புதிய சூழலுக்குள் புகுவது ஆபத்தானது தான்... ஒவ்வொரு புதிய சூழலில் நுழையும்போதும் நமக்குள் ஒரு மரணம் நிகழ்கிறது..

ஒவ்வொரு குழந்தையின் அழுகையும் அதன் பயத்தை புலப்படுத்துகிறது..பிறப்பும் ஒரு வித இறப்புதான் குழந்தையை பொறுத்தவரை.. ..
வளர்ச்சி காலத்தின் கொடை என்றால் மரணம் அதன் இன்னொரு பரிமாணம்..மரணம் தேவை இல்லை என்றால் வளர்ச்சியும் நின்று போகும்....
பிறப்பு இறப்பின் போது தீர்மானிக்க படுகின்றது..
இறப்பின் கையில்தான் பிறப்பிற்கான தராசு இருக்கிறது....

இறையன்பு...

Wednesday, January 20, 2010

சந்தேகம் ஆரம்பமாகிடுச்சு டோய்



என் ப்ளாக் ல சும்மா காபி வடை டி நு அடுத்தவங்க சரக்கே சுட்டு போடறேன்னு நண்பர்கள் மத்தியில கடும் புரணி நிலவ்ரதால ஒரு ரோஷதில நானும் என் லொள்ளு வேட்டை ய ஆரம்பிச்சுட்டேன்...சந்தேகமே வேணாம் இது என் 100% சொந்த நொந்த வெட்டி சரக்கே ...


என் முயற்சில வெட்டிகாரன் சாரி வேட்டைக்காரன் படம் பத்தின பத்து சந்தேகத்த உங்க கிட்ட பகிர்ந்துகிறேன்..இது சிரிக்க மட்டும் இல்ல கண்டிப்பா சிந்திக்கவும் செய்ங்க !!!

சந்தேகம் ஆரம்பமாகிடுச்சு டோய்:.....

1.)நம்ம டைரெக்டர் பா(ப்ரே)பு சிவனுக்கு சிந்தனையே அலாதி தாங்க முதல் அறிமுக காட்சி ல ஏ விஜய் கு 120 ஸ்பீட் ல போயிட்டு இருக்கற வண்டியில துரத்திட்டு வந்தவரு எப்டி கௌ பாய் மேக் அப் கரெக்ட்டா போட்டுக்கிட்டு வந்து ஒரு போலீசையே மிரட்டி எல்லா மேட்டர் உம் கரெக்ட் பண்றாங்க ?இப்டி கூட ஒரு குடி மகன் பண்ண முடியுமா ?
இதுல பந்தா டயலாக் வேற நேத்து தாசில்தார் முந்தாநாள் கலெக்டர் அப்டின்னு ..?இன்னாங்கப்பா இது ???????



2.).லட்ச்சதில ஒருத்தர் கஷ்டப்பட்டு படிச்சு டிஜிபி ஆனா எல்லாருமே காலேஜ் ல படிச்சு ஆட்டோ ஓட்டினா போலிஸ் ஆகலாம் நு ஐடியா எப்படிங்க வந்துச்சு ?
பர்ஸ்ட் இயர் ஆர்ட்ஸ் படிச்சு எல்லாரையும் அடிச்சா போலிஸ் ஆகிடலாமா????? ?


3)மெட்ரோ சட்டியில ...சாரி சிட்டியில ட்ராபிக் போலீஸ் இல்லாத இடத்துல யார் வேணா அந்த ட்ராபிக் சரி பண்ணலாமா ?அது ஒரு டெரிபிக் ஆ இருக்கே நைனா ?????

4).அவ்வளவு உயரத்துல இருந்து அடர்ந்த காடு இருக்கற இடத்துல அருவி ல குதிச்ச கீரோ அது எப்டி ஒரு அடி கூட படாம தப்பிக்கிறாரு? ஒரு சின்ன ரத்த காயம் கூட இல்லாம அதே ஆட்டோ ஸ்டைல் ள்ள வெளியில வராரு ?ஏன் யா தண்ணில அந்த மாஞ்சா துணி கூடவா பொய் இருக்காது ?இல்ல அதை தான் எவனாச்சும் தேடி எடுத்து கொண்டாந்து போட்டுக்கோ நைனா ன்னு குடுத்தாங்களா ?????





5)ரெண்டு சீன்ல ஏ பணக்காரன் ஆனா கீரோ அவரு பணத்தை காட்ட எப்பவும் கொலைவெறியோட சுட்டெரிக்கிற வெயில்ல ஜெர்கின் ல அலையனுமா என்ன ???



6)ஏன் மிஸ்டர் பாப்ரே சிவன் கீரோ க்கு கொலை வெறி வரணும்னா இரக்கம் வரணுன்க்ராதுக்காக புச்சா கல்யாணம் ஆனப்ரெண்ட போட்டு தள்றாங்க ?
பின்னாடி எத்தனை எருமைங்க இருக்கறாங்க ?மொட்டை ,தடிமாடு,எருமை ன்னு அதுல ஒன்னை போட்டு தள்ள வேண்டியது தானே ?எப்போ தான் இவங்க மாறுவாங்க ?கீரோ வோட ப்ரெண்டு ,ப்ரெண்டு பொண்டாட்டி ,குழந்தை ,அம்மா தங்கச்சி பக்கத்து வீடு குழந்தை இப்படி இவங்க யாராச்சும் செத்தா தான் கீரோ கு கோவம் வரும் ங்கற ட்ரெண்டை எப்ப மாத்த போறாங்க ?அதுக்கு பேசாம கீரோ வையே போட்டு தள்ளிட்டா நம்மளாவது நிம்மதியா படம் முடிஞ்ச திருப்தி ல தியேட்டரை விட்டு வெளியில வருவோம்ல ?????






7)அடிக்கடி பீடா(feeeeeed) நடந்து வந்து வந்து ஸ்டைல் ஆ நிக்கறேன் பேர் வழி ன்னு ஏன் புள்ளதாச்சி பொம்பள கணக்கா ஏன் விஜய் நிக்கறாரு..அசதோமா சத்கமைய கு நடன இயக்குனர் கதாநாயகனுக்கு அமைத்து குடுத்த இந்த நடன பாவம் உண்மையிலேயே பாவம்[pavam] சிறந்த நடன இயக்குனர் விருது இந்த ஆண்டு நடன அமைப்பாளருக்கு கிடைத்தாலும் கிடைக்குங்க !!!



8)வில்லன அடிச்சு தூள் பண்ற கடைசி கட்டத்துல எப்டி கூலிங் க்ளாஸ் போட்டு சாவடிக்கிறாரு ?ரெடியா சண்டை போடா வரத் தெரியுதுல்ல அப்போ ரொம்ப முக்கியம் கூலிங் க்ளாஸா இல்ல துப்பாக்கியா ?த்தோடா இது கூட தெரியாம இன்னாப்பா கீரோநீ ???



9).அதுல ஹாய் டெக் காமெடி உலக வரலாற்றில் முதல் முறையாக நம்ம வேதா தான் எலெக்ஷன் ல நிக்காமலேயே அமைச்சர் ஆகறாரு.இப்படி கூட நடக்குமா ?என்ன கொடுமை சனங்களே இது ???????


10)ஐயா டைர ட்டகரே நீங்க செஞ்ச ஒரே நல்ல காரியம் விசய்ய சிப்பு போலீஸ் ஆக்காம விட்டதுதான்.அதுகூட இல்லாம கடைசியில் சொல்வீங்களே பிட்டு சான்குல நகரு நகரு நகரு ன்னு மக்களை நல்ல விதமா விரட்டினீங்க பாருங்க ..அங்க நிக்கறீங்க ..இது தான் டைரெக்டர்டச் ...........




அதுனால நண்பர்களே யாரும் வேட்டைக்காரன் போய்டாதீங்க திகில் படத்த காட்டிலும் பல புதிர்கள் உடையது நீங்க போய் உங்களை குழப்பிக்கிட்டு வராதீங்க உஷாரு சனங்கள உஷாரு.... vartaaaaaa